கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தங்க விற்பனையாளர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் கடத்திய 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருச்சி, சென்னை, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு தங்கம் விற்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து திருச்சியில் விசாரணை மேற்கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள், இன்று சென்னை வந்து அங்குள்ள தங்கம் மொத்த கொள்முதல் விற்பனையாளர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.