காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தியை பொது பாதுகாப்புச் சட்டத்தில் தடுத்து வைத்ததை காஷ்மீர் நிர்வாகம் மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்து, இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஃபாரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா இருவரும் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர்.
அதேநேரத்தில், நேற்று மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவரும் மற்றும் முன்னாள் மாநில அமைச்சருமான சஜித் லோன் விடுக்கப்பட்டார். 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அவர் ஒரு வருடம் கழித்து விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.