சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாக வண்ணத் தொலைக்காட்சிகள் இறக்குமதிக்கு செய்வதற்கு இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ளது. கால்வன் மோதலுக்குப் பின் சீனச் செல்பேசிச் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.
இதேபோல் சீனாவில் இருந்து மின் கருவிகள் இறக்குமதி செய்ய வேண்டாம் எனப் பொதுத்துறை மின் நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டது. நெடுஞ்சாலை, ரயில்வே துறைகளில் சீனாவுக்கு அளித்திருந்த ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்த வரிசையில், வண்ணத் தொலைக்காட்சிகள் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கட்டுப்பாடு இல்லாமல் இருந்த நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதியைத் தடுப்பதற்காக இப்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்குத் தொலைக்காட்சி வணிகம் நடைபெறுகிறது. இவற்றில் 36 விழுக்காடு சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன.