டெல்லியில் ஜூன் மாதத்தில் நாள் ஒன்றிற்கு 372 டன் எடையிலான மருத்துவக் கழிவுகள் உற்பத்தி ஆனதாக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தலைநகரில் கடந்த ஜூன் மாதத்தில் உச்சம்தொட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் மே மாதத்தில் நாள் ஒன்றிற்கு 25 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தி ஆன நிலையில், ஜூன் மாதத்தில் கழிவு உற்பத்தி சுமார் 15 மடங்கு அதிகரித்து ஜூலை மாதத்தில் 349 டன் அளவிற்கு குறைந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.