கால்வனில் சீனாவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள் 20 பேரின் பெயர்களும், டெல்லி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 15 ஆம் தேதி கிழக்கு லடாக் கட்டுப்பாட்டு எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் இந்த 20 வீரர்களும், எல்லையை காக்கும் பணியில், சீன துருப்புக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, வீர மரணம் அடைந்தனர்.
இந்த 20 பேரின் பெயர்களையும் நினைவுச் சின்னத்தில் பொறிக்கும் பணி சில மாதங்களில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.