எல்லை பிரச்சனையில், சீனாவுக்கு நிகராக தனது திறனை, இந்தியா வெளிப்படுத்தியுள்ளதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான மூத்த இயக்குநர் லிசா குர்டிஸ் பாராட்டி உள்ளார்.
பிராந்திய அளவில் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கம் என்ற தலைப்பில் நடந்த காணொலி கருத்தரங்கில் இதை தெரிவித்த அவர், சீன செயலிகளுக்கு தடை விதித்ததன் மூலமும், சீன முதலீடுகளை நிறுத்தி வைத்துள்ளதன் மூலமும் இந்தியா, சீனாவுக்கு வெற்றிகரமாக பொருளாதார நெருக்கடியை கொடுத்துள்ளது என கூறினார்.
லடாக் எல்லையில் இருதரப்பு படைகளும் வாபஸ் பெறப்படுவதாக செய்திகள் வெளியாவது நல்லது என்ற அவர், அதே நேரம் சீனா கொடுத்த அழுத்தம் அதற்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.