அனில் அம்பானி வாங்கிய 2,800 கோடி ரூபாய் கடனுக்காக மும்பையிலுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம் கையகப்படுத்தப்படும் என யெஸ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தங்களிடம் வாங்கிய கடனுக்காக மும்பை சாந்தாகுருசில் உள்ள தலைமையகம் மற்றும் தெற்கு மும்பையில் உள்ள இரண்டு அலுவலகங்களுக்கும் கையகப்படுத்த முடிவு செய்திருப்பதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.
21 ஆயிரத்து 432 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சாண்டா குரூஸ் தலைமையகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலையன்ஸ் பிஎஸ் என்றும் அதன் பின்னர் பெல்லேட்ஸ் எனர்ஜி என்றும் பெயர் மாற்றப்பட்டது.
இந்தக் கட்டடத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வந்தன.
சமீபத்திய காலங்களில் அதன் செயல்பாடுகள் குறைந்ததால் பெரும்பாலான அலுவலகங்கள் செயல்படவில்லை. இந்த நிலையில் எஸ் வங்கி அனுப்பியுள்ள நோட்டீஸ், அனில் அம்பானிக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.