இந்தியாவில் கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஆசிய வளர்ச்சி வங்கி சுமார் 22 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
ஆசிய பசுபிக் பேரிடர் மேலாண்மை நிதிதொகுப்பிற்கு , ஜப்பான் அரசு வழங்கும் நிதியை கொண்டு இந்தியாவிற்கு இந்த உதவி வழங்கப்படுகிறது.
உடல் வெப்பநிலைய பரிசோதிக்க உதவும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகளுடன், கொரோனா சிகிச்சையை வழங்க இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதத்திலும், ஆசிய வளர்ச்சி வங்கி சுமார் 1 கோடி ரூபாயை இந்தியாவிற்கு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.