ராஜஸ்தான் மாநில சட்டசபை கூட்டத்தை ஆகஸ்ட் மாதம் 14ம் தேதியில் இருந்து நடத்த, அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடிய தூக்கிய நிலையில், தனது அரசுக்குப் பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க சட்டமன்றத்தைக் உடனடியாக கூட்ட வேண்டும் என முதலமைச்சர் அசோக் கெலாட், ஆளுநரிடம் வலியுறுத்தினார்.
ஆனால், சட்டமன்றத்தைக் கூட்ட 21 நாட்களுக்கு முன் எம்.எல்.ஏக்களுக்கு அறிவிப்புக் கொடுக்க வேண்டும் எனக் கூறி, முதலமைச்சரின் கோரிக்கையை மூன்றாவது முறையாக ஆளுநர் நிராகரித்து விட்டார்.
இந்நிலையில், அனைத்து விதமான கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றி, ஆகஸ்ட் 14ம் தேதி சட்டசபையை கூட்ட ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.