8-ம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம் என்றும், சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு வேற்று மொழியை விருப்பப் பாடமாக கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிப் பாடத் திட்டம் பலரின் எதிர்ப்புகளை மீறி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தாய் மொழி அல்லது பிராந்திய மொழி கட்டாய மொழியாகவும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும் ஏற்கனவே இருந்து வரும் சூழலில், புதிதாக விருப்ப மொழியையும் ஒரு பாடமாக மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 8-ம் வகுப்பு வரை இந்திய மொழிகள் என்ற தலைப்பில் மாணவர்கள் விளையாட்டு அல்லது செயல்முறைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பிற நாட்டு மொழிகளும் பயிற்றுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.