புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான வல்லுநர் குழு, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை, கடந்த ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருந்தது.
அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. அந்த வரைவு திட்டத்தின் மீதான கருத்துக் கேட்கப்பட்டு ஒரு சில திருத்தங்கள் செய்யப்பட்ட பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
3, 5, 8ஆம் வகுப்புகளில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தி மாணவர்களின் கற்றல் திறனை கண்டறிதல், 12ஆம் வகுப்பு வரை கல்வி கற்பதை கட்டாயமாக்குதல் உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர், கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது.