இந்தியாவில் இருந்து ஒவ்வொரு மாதமும் 4 கோடி அறுவை சிகிச்சை மாஸ்குகளை ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் தொழில்துறையின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ள, பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்குகள் மட்டுமின்றி 20 லட்சம் மருத்துவ கண்ணாடிகளையும், தடையின்றி முகக் கவசங்களையும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.