இந்தியாவுக்கு 120 வென்டிலேட்டர்களை பரிசாக பிரான்ஸ் நாடு அளித்துள்ளது.
கொரோனா பாதித்தோருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அமெரிக்கா முதல்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளித்தது. இதையடுத்து இஸ்ரேல் நாடு அண்மையில் 50 வென்டிலேட்டர்களை அளித்தது. இந்நிலையில் பிரான்ஸ் நாடு ஓசிரிஸ்-3 வென்டிலேட்டர்களை (Osiris-3 ventilators) 50 எண்ணிக்கையிலும், யுவெல் 830 ரக வென்டிலேட்டர்களை (Yuwell 830 ventilators) 70 எண்ணிக்கையிலும் அளித்துள்ளது.
அவற்றையும் 50 ஆயிரம் உயர்தர செரோலாஜிக்கல் (high-quality serological) ஐஜிஜி/ஐஜிஎம் கொரோனா பரிசோதனை கிட்கள் (IgG/IgM test kits) மற்றும் 50 ஆயிரம் ஸ்வாப்களையும் (swabs) டெல்லியில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லீனாய்ன் (Emmanuel Lenain) இந்திய செஞ்சிலுவை பொது செயலாளர் ஆர்.கே. ஜெயினிடம் அளித்தார்.