கேரளா தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரிடம் பத்தரை மணி நேரம் நீண்ட விசாரணைக்குப் பின் அவரை என்ஐஏ அதிகாரிகள் வீட்டிற்கு செல்ல அனுமதித்தனர்.
கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நேற்று காலை துவங்கிய விசாரணை இரவு ஒன்பதரை மணி வரை நீண்டது. அதில், முக்கிய குற்றவாளிகளான ஃபைசல் பரீது, ரமீஸ் ஆகியோருடன் தொடர்பு இல்லை என்பது உறுதியானதை அடுத்து அவர் திருவனந்தபுரம் திரும்பிச் செல்ல என்ஐஏ விசாரணை அதிகாரிகள் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.
சொப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயருடன் தமக்கு தொடர்பு உண்டு என்று விசாரணையின் போது சிவசங்கர் சம்மதித்ததாக கூறப்படுகிறது. சிவசங்கரிடம் 2 ஆம் தடவையாக மொத்தம் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.