உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் பயன்பாட்டிற்கான பரிசோதனை முயற்சி மேற்கொளப்பட்டது.
தொலை தூர கிராமங்களில் வசிப்போருக்கு அவசர சிகிச்சை வழங்க எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக விமான ஆம்புலன்ஸ் சேவைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டேராடூன் விமான நிலையத்தில் இருந்து, ரிஷிகேஷ் எய்மஸ் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் நேற்று சோதனை முயற்சியில் இயக்கப்பட்டது. தொடர்ந்து, இத்திட்டத்தை உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் (Trivendra Singh) விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தியாவில் விமான ஆம்புலன்ஸ் சேவை கொண்ட முதல் அரசு சுகாதார நிறுவனமாக, ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை மாற உள்ளது குறிப்பிடத்தக்கது.