சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப 4 ஆண்டுகள் வரையில் ஆகும் என, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, சர்வதேச அளவில் விமான சேவை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் நடப்பாண்டில் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை சுமார் 86 புள்ளி 5 சதவீதமும், சர்வதேச விமானப்போக்குவரத்து சேவை சுமார் 97 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2023ம் ஆண்டில் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என கூறப்பட்ட நிலையில், 2024வரை தற்போதைய நிலை நீடிக்கலாம என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.