இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 558 புள்ளிகள் உயர்ந்து, 38 ஆயிரத்து 492 புள்ளிகளை எட்டியது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 168 புள்ளிகள் அதிகரித்து, 11 ஆயிரத்து 300 புள்ளிகளானது.
வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், உலோகம், வங்கி, நிதி சேவை நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமானது. எதிர்பார்த்ததை விட சிறப்பான முதல் காலாண்டு நிதி நிலை முடிவை நிறுவனங்கள் அறிவித்து வருவது சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ஒரு காசு உயர்ந்து 74 ரூபாய் 84 காசுகளாக இருந்தது.