நாட்டில் முதன்முறையாக, தாயிடம் இருந்து கருவில் இருந்த பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று பரவியதை புனே சாசூன் பொது மருத்துவமனை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அறிகுறிகள் எதுவும் இல்லாத தாயிடம் இருந்து, கர்ப்ப்பையில் இருந்த குழந்தைக்கு, தொப்புள் கொடி வழியாக, பிரசவத்திற்கு முன்னரே வைரஸ் தொற்று ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஐசிஎம்ஆர் விதிகளின் படி குறிப்பிட்ட கர்ப்பிணிக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனால் பிறந்த குழந்தையின் மூக்கு சளி, தொப்புள் கொடி ஆகியவற்றை சோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிர அறிகுறிகள் காணப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் உரிய சிகிச்சை வழங்கியபின். 2 வாரங்களில் குழந்தை குணமடைந்ததை அடுத்து தாயும் சேயும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்