கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 5 நாள் சுங்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க, பொருளாதார குற்றங்களுக்கான கொச்சி கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இதை அடுத்து இந்த இருவரையும் வரும் ஒன்றாம் தேதி வரை கஸ்டடியில் வைத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் துவக்கி உள்ளனர். இதே வழக்கில் தொடர்புடைய இதர குற்றவாளிகள் என கூறி சுங்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, துபாயில் உள்ள ஃபைசல் பரீது மற்றும் ராபின்ஸ் மீது ஜாமின் இல்லாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார்.
இதனிடையே கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலாக இருந்த சிவசங்கரிடம், கொச்சி என்ஐஏ அலுவலகத்தில் வைத்து இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்படுகிறது. நேற்று அவரிடம் 9 மணி நேரம் நீண்ட விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் நடத்தினர்.