சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் மத்திய- மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனைத்தொடர்ந்து, சாலை திட்ட இயக்குனர் மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் கடந்த மே மாதம் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற திட்ட அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று அருண்மிஸ்ரா அமர்வு முன்பு கடந்தவாரம் விசாரணைக்கு வந்தது.
எதிர் மனுதாரர் மனுவை ஒத்திவைக்கும்படி வாதாடியதன் அடிப்படையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.