சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 371 பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக, மத்திய தரக்கட்டுப்பாட்டு இயக்குனர் பிரமோத் குமார் திவாரி தெரிவித்துள்ளார்.
இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கும் மத்திய அரசின் ஆத்ம நிர்மான் பாரத் திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள், எலக்ட்ரானிக் சாதனங்கள், இரும்புக் கம்பிகள், கண்ணாடி மற்றும் காகிதம் போன்றவை, இந்தியாவின் தரக் கட்டுப்பாடு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த நடவடிக்கைகள் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.