அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.
பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயகட்டத்தை தாண்டியுள்ள நிலையில், 22 மாவட்டங்கள் வெள்ளக்காடாய் மாறியுள்ளன.
மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தார். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன.
சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் காஜிரங்கா பூங்காவில் இதுவரை 14 காண்டாமிருகங்கள் உட்பட 132 விலங்குகள் உயிரிழந்துள்ளன.