லேசான மற்றும் மிதமான அறிகுறிகள் உள்ள கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ஃபேவிபிராவிர் மருந்து இனிமேல் 3 பிராண்டுகளில் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கிளென்மார்க் மருந்து நிறுவனம் ஏற்கனவே FabiFlu என்ற பெயரில் கடந்த மாதம் விற்பனைக்கு வெளியிட்டது. நோயாளிகளுக்கு இரண்டு வார காலத்தில் 122 மாத்திரைகளை வழங்க வேண்டிய நிலையில், FabiFlu மாத்திரைக்கு 9150 ரூபாய் தேவைப்படும்.
அடுத்த மாதம் முதல் வாரம் விற்பனைக்கு வர உள்ள சிப்லாவின் Ciplenza மாத்திரையின் விலை 68 ரூபாயாகும். இதற்கான செலவு 8296 ரூபாய் ஆகும்.. விரைவில் விற்பனைக்கு வர உள்ள மற்றோர் நிறுவனமான Jenburkt’-ன் Favivent மாத்திரையின் விலை 39 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைக்கான செலவு இருப்பதிலேயே குறைவாக 4,758 ரூபாயாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.