அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டுவதற்கு அனைத்து மதத்தினரிடம் இருந்தும் நன்கொடை ஏற்றுக் கொள்ளப்படும் என கட்டுமான அறக்கட்டளை உறுப்பினரும், உடுப்பியில் உள்ள பெஜாவர் மட தலைவருமான விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமி தெரிவித்துள்ளார்.
கட்டுமான அறக்கட்டளையின் காணொலி ஆலோசனைக்குப் பின்னர் இதை தெரிவித்த அவர், நபருக்கு 10 ரூபாய் அல்லது குடும்பம் ஒன்றிடம் இருந்து 100 ரூபாய் என்ற அளவில் நன்கொடை வசூலிக்கப்படும் என்றார். இது ஒரு குறியீடு மட்டுமே என்ற அவர் ஒரு ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை நன்கொடை அளிக்கலாம் என தெரிவித்தார்.
வரும் 5 ஆம் தேதி நடக்க உள்ள பூமி பூஜைக்கு மட்டும் 300 கோடி ரூபாய் செலவாகும் என குறிப்பிட்ட அவர், கோயிலை சுற்றி உள்ள இடங்களை மேம்படுத்த 1000 கோடி ரூபாய் தேவைப்படும் என்றார்.