கொரோனாவில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 63.92 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்கும் இடையேயான வித்தியாசம் 4 லட்சத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது சிகிச்சை பெறுபவர்களை விடவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.89 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவியதில் இருந்து முதன்முறையாக ஒரே நாளில் 36 ஆயிரம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். அதே போன்று முதன்முறையாக ஒரே நாளில் 4 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. இறப்பு விகிதமும், 2.31 சதவிகிதம் என உலக அளவில் குறைந்த விகிதங்களில் ஒன்றாக உள்ளது.