தம்மை தவறாக வேலையை விட்டு நீக்கியதாக சீன ஆன்லைன் நிறுவனமானஅலிபாபா மீது இந்திய ஊழியர் தொடுத்த வழக்கில், அதன் தலைவர் ஜேக் மா-வுக்கு குருகிராம் நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதால் சீனாவின் 59 செயலிகள் அண்மையில் தடை செய்யப்பட்டன.
இந்த நிலையில் அலிபாபாவின் யுசி நியூஸ் போன்ற செயலிகளில் செய்திகள் சென்சார் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த புஷ்பாந்திர சிங் பார்மரை அலிபாபா வேலையில் இருந்து நீக்கியது. இவர் குருகிராமில் உள்ள யுசி வெப் அலுவலகத்தில் கடந்த 2017 டிசம்பர் வரை துணை இயக்குநராக பணியாற்றி வந்தார். இந்த வழக்கில், சுமார் 20 கோடியே 36 லட்ச ரூபாய் அவர் இழப்பீடு கேட்டுள்ளார்.