அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை காணொலி வாயிலாக நடத்தலாம் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். சிவசேனா பத்திரிகையான சாம்னாவில் இதை தெரிவித்துள்ள அவர், அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு பின்னால் ஒரு போராட்டம் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இப்போது கொரோனாவுடன் போராட்டம் நடத்தும் நிலையில் வழிபாட்டுக்காக மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்மால் அயோத்தியாவுக்கு செல்ல இயலும் என்றாலும் லட்சக்கணக்கான பக்தர்களை தடுக்க முடியுமா என்று சந்தேகம் எழுப்பிய அவர், பூமி பூஜையை காணொலியில் நடத்தினால் பக்தர்கள் அனைவராலும் அதை காணமுடியும் என கூறி உள்ளார்.