பெங்களூருவில் கொரோனா தொற்று உறுதியான 3 ஆயிரத்து 338 நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் போலியான முகவரி மற்றும் செல்போன் நம்பர்களை கொடுத்து சோதனை செய்துள்ளதாகவும், தொற்று உறுதியான நிலையில் அவர்களை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை என்றும் மாநகராட்சி ஆணையாளர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தார்.
இவர்கள் மூலம் மேலும் பலருக்கு தொற்று பரவும் அபாயம் உள்ள நிலையில், இனிமேல், அரசு அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றையும், மொபைல் எண்ணையும் சரிபார்த்த பிறகே சோதனைக்கு அனுமதி என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
class="twitter-tweet">தொற்று உறுதியான 3,338 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை - பெங்களூரு மாநகராட்சி #Bangalore #FakeAddress #coronapositive https://t.co/tOMGOFPHYy
— Polimer News (@polimernews) July 26, 2020