மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளிச் சிறுவனின் போலீஸ் கனவை நனவாக்கும் விதத்தில் காவலர் ஒருவர் பள்ளி பாடங்களை சொல்லி கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜ் என்ற பள்ளிச் சிறுவன், தான் போலீசாக வேண்டும் என்று விரும்பியுள்ளான். ஆனால் அவனது ஏழ்மை நிலை அதற்கு இடம் தரவில்லை. ஒருநாள் சாலையில் தனியாக ராஜ் அமர்ந்திருந்த போது அந்த வழியாக ரோந்து வந்த வினோத் தீக்சித் என்ற காவலர் சிறுவனை பற்றி விசாரித்துள்ளார்.
ராஜ் தன்னுடைய போலீஸ் கனவை அவரிடம் சொன்னதும் மகிழ்ச்சியில் வியந்து போன வினோத் தீக்சித், தனது பணி நேரம் முடிவுற்றதும் அந்த பையன் வீட்டிற்கு வந்து கணிதம் மற்றும் ஆங்கில பாடங்கள் குறித்து சொல்லிக் கொடுக்கிறார். அந்த வீடியோ தற்போது அதிகம் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.