ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
சீனா உடனான எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் சூழலில், பாகிஸ்தான் ராணுவத்தினரும் தொடர்ந்து இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மான்கோட் செக்டார் பகுதியில், நேற்று இரவு 8.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் வீரர்கள் யாரும் காயமடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.