மகாராஷ்டிரத்தில் பள்ளிப் பாடங்களை 25 விழுக்காடு குறைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா சூழலில் நடப்புக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள பாடங்களை 25 விழுக்காடு குறைத்துக் கொள்ளலாம் என மகாராஷ்டிரக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழு தெரிவித்துள்ளது.
இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மகாராஷ்டிரப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்சா கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எந்தெந்தப் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்கிற விவரம் விரைவில் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என வர்சா கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.