கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 65 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
அங்கு கொரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர். இருப்பினும், குறைவான பக்தர்களே கோயிலுக்கு வருவதாக கூறப்படுகிறது.
ஜூன் 11-ம் தேதி முதல் இதுவரை 20 கோடி ரூபாய் மட்டுமே உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் திருப்பதி கோயிலுக்கு 1,100 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்க வேண்டிய சூழலில், தற்போது வங்கிகளில் கிடைக்கும் வட்டி உள்ளிட்டவை மூலம் 270 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.