கபே காபி டே நிறுவனத்தில் இருந்து சித்தார்த்தா மூவாயிரத்து 535 கோடி ரூபாயை எடுத்துத் தனது சொந்த நிறுவனத்துக்குப் பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், கபே காபி டே நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான சித்தார்த்தா கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் நாள் மங்களூரில் நேத்ராவதி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
வருமான வரித்துறையின் துன்புறுத்தலால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியதில், கபே காபி டே நிறுவனத்தில் இருந்து மூவாயிரத்து 535 கோடி ரூபாயை சித்தார்த்தாவின் மேசல் நிறுவனத்துக்குப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதில் 842 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தியதும், இரண்டாயிரத்து 693 கோடி ரூபாய் நிலுவை இருந்ததும் தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சித்தார்த்தா தற்கொலைக்கு வருமான வரித்துறை காரணமில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.