மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணாவின் 15 லட்சம் டாலர் மதிப்பு ஜாமின் விண்ணப்பத்தை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்தது.
2008 நவம்பர் 26 மும்பையில் தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக கனடா வாழ் பாகிஸ்தானியரான தஹாவூர் ராணா, அமெரிக்காவின் சிகாகோவில் 2009 இல் கைது செய்யப்பட்டான்.
கொரோனா காரணமாக விடுவிக்கப்பட்ட ராணாவை ஒப்படைக்குமாறு இந்தியா கோரியதையடுத்து கடந்த மாதம் 10 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டான்.
இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி ராணா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராணாவுக்கு ஜாமின் வழங்கினால் இந்தியாவின் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இது அமெரிக்காவின் வெளிநாட்டு விவகாரங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.