நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் பெருந்தொற்றுக்கு 757 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 31 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8 லட்சத்து 49 ஆயிரத்து 431 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
4 லட்சத்து 56 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 63.53 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரத்தில் 357117 பேருக்கும், இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 199749 பேருக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியில் 128389 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.