புதுச்சேரியில் கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மதகடிபட்டியில் உள்ள மணக்குல விநாயகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை 2ஆயிரத்து 513 பேர் நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், எம்.எல்.ஏ. ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ. ஜெயபால் கடந்த 20-ம் தேதி முதல் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2 நாட்கள் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர், அமைச்சர்கள், பிற சட்டமன்ற உறுப்பினர்கள், நிரூபர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.