தெலங்கானாவின் குண்டலா என்னும் ஊரில் வெள்ளத்தில் தற்காலிகப் பாலம் அரித்துச் செல்லப்பட்டதால் கர்ப்பிணிப் பெண்ணை உறவினர்கள் கைத்தாங்கலாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் குண்டலா என்னும் ஊரில் ஓடையில் அமைத்திருந்த தற்காலிகப் பாலம் வெள்ளத்தில் அரித்துச் செல்லப்பட்டது.
இதனால் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணை உறவினர்கள் கைத்தாங்கலாகத் தூக்கிக் கொண்டு ஆற்றைக் கடந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.