லடாக்கில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்கப் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு ஒன்றிய ஆட்சிப் பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. லடாக்கின் வளர்ச்சிக்குச் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்துப் பிரதமர் மோடி தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் லடாக்கில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்கக் கொள்கை அளவிலான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல் பாடப் பிரிவுகள் தவிர அனைத்துக் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளும் இடம்பெற உள்ளன. பவுத்த மதம் குறித்துப் படிக்கும் ஓர் மையமும் இதில் இடம் பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.