கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஃபேவிபிராவிர் ( Favipiravir) மருந்தை விரைவில் அறிமுகப்படுத்த, மும்பையில் உள்ள சிப்லா மருந்து நிறுவனம் தயாராக உள்ளது என சிஎஸ்ஐஆர் எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
குறைவான விலையில் இந்த மருந்தை தயாரிக்கும் வகையில், உள்நாட்டில் கிடைக்கும் வேதிப் பொருள்களை வைத்து உருவாக்கும் தொழில்நுட்பத்தை சிஎஸ்ஐஆரின் ரசாயன தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் மிகவும் வித்தியாசமான ஒன்று என்றும், அதன் வாயிலாக பெருமளவிலான மருந்து உற்பத்தியை குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ள முடியும் என்றும் சிஎஸ்ஆரின் இயக்குர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஃபேவிபிராவிர் மருந்தை கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய அரசின் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த மருந்தின் உற்பத்தியை சிப்லா நிறுவனம் முடுக்கி விட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.