கொரோனா பரவலின் நிலை எவ்வாறு உள்ளது, அது அதிகரிக்கும் போக்கில் உள்ளதா, குறையும் போக்கில் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான சீரோ ஆய்வு மும்பையில் முதல் கட்டமாக நடத்தப்பட்டுள்ளது.
உடலில் நோய் எதிர்ப்பு புரதங்கள் என கண்டறியும் ரத்த சீரம் ஆய்வின் மூலம், டெல்லியில் 23 சதவீதம் பேருக்கு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது. அதாவது டெல்லியில் 23 சதவீதம் பேர், ஏற்கெனவே நோய் தாக்கத்திற்கு ஆளாகி, நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகியிருந்ததை இந்த ஆய்வு காட்டியது.
இதன் மூலம், டெல்லியில் கொரோனா பரவுவது உச்சநிலையை கடந்திருக்கலாம் என கருதப்பட்டதோடு, திடீரென பெரும் எண்ணிக்கையில் நோய்த் தொற்று அதிகரிக்கும் என்ற அச்சத்திற்கு அவசியமில்லை என கூறப்பட்டது. இதேபோன்ற ஆய்வு மும்பையில் 3 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல, மும்பையில் அடுத்த மாதத்தில் மேலும் ஒரு ஆய்வை, மாநகராட்சியும், நிதி ஆயோக் உள்ளிட்ட அமைப்புகளும் இணைந்து மேற்கொள்கின்றன. முதல் கட்ட சீரோ ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.