ராஜஸ்தானில் அரச குடும்பத்தை சேர்ந்த ராஜா மான்சிங் என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில், 35 ஆண்டுகளுக்கு பிறகு 11 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பரத்பூர் வம்சத்தை சேர்ந்த மான்சிங் 1952-லிருந்து 32 ஆண்டுகள் சுயேட்சை எம்எல்ஏவாக பதவி வகித்தார். 1985ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் முதலமைச்சருடன், மான்சிங் மோதலில் ஈடுபட்ட நிலையில் போலீசாரின் என்கவுண்டரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முதலில் இந்த வழக்கு ஜெய்ப்பூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு பின்பு மதுரா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், ஓய்வு பெற்ற 11 காவலர்களை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.