கால்வான் சண்டையில் பலியான கர்னல் சந்தோஷ்பாபுவின் மனைவி சந்தோஷிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கப்பட்டுள்ளது.,
கடந்த ஜூன் மாதம் 15- ந் தேதி லடாக் எல்லை பகுதியில் கால்வானில் நடந்த சீன துருப்புகளுடனான மோதலில் இந்திய படை வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். அதில், ஹதரபாத்தை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவும் ஒருவர். இவருக்கு சந்தோஷி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உண்டு.
சந்தோஷ் பாபுவின் மறைவுக்கு பிறகு அவரின் வீட்டுக்கு சென்ற தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் , மொத்தம் ரூ. 5 கோடி நிதியுதவி செய்தார். சந்தோஷ் பாபுவின் மனைவிக்கு ரூ. 4 கோடியும் அவரின் பெற்றோருக்கு ரூ. 1 கோடியும் நிதி உதவி செய்திருந்தார்.அதோடு, ஹைதரபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 711 சதுர அடி நிலமும் ஒதுக்கப்படும் என்றும் சந்திரசேகரராவ் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் , சந்தோஷியை துணை ஆட்சியராக நியமித்து தெலங்கானா மாநில முதுலமைச்சர் சந்திரசேகரா ராவ் உத்தரவிட்டுள்ளா. இதற்கான உத்தரவை நேற்று தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷியிடம் வழங்கினார். மேலும், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒதுக்கப்பட்ட நிலத்துக்கான பட்டாவையும் ஒப்படைத்தார்.
ஹைதரபாத் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தோஷி துணை ஆட்சியராக நியமிக்கப்படுவார். சந்தோஷிக்கு முறையான பயிற்சி அளித்து பணியில் அமரும் வரை உதவியாக இருக்கும் படி தன் செயலர் ஸ்மிதா சபர்வாலுக்கு சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.