ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
போலீசாரும் திருப்பிச் சுட்டதில் அங்கு கடும் சண்டை மூண்டது. இந்த யுத்தத்தில் அப்துல் ரஷீத் தார் என்ற காவலர் ஒருவர் தீவிரவாதிகளால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிர் பிரிந்துவிட்டது.