பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் தொழிலாளர் யூனியன்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 15 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இதனால் அரசுத் தரப்புக்கு கூடுதலாக 7 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கூடுதலான செலவு ஏற்படும். இந்த ஊதிய உயர்வால் சுமார் 9 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன் பெறுவார்கள். நவம்பர் 2017 தேதி முதல் கணக்கிட்டு ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்களின் திறனுக்கேற்ற ஊதியம் என்ற புதிய நடைமுறையையும் அரசுத் தரப்பு வலியுறுத்தி வருகிறது. லாபத்துடன் இயங்கும் வங்கிகளில் பணியாற்றுவோருக்கு இதனால் எதிர்காலத்தில் கூடுதலான ஊதிய உயர்வுக்கு வாய்ப்பிருக்கும் என்றும் கூறப்படுகிறது.