உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் மேலும் ஒரு கார் திருட்டு கும்பலை கைது செய்து பிஎம்டபிள்யூ உள்ளிட்ட 62 கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கார் திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கடந்த மாதம் கார் திருடர்கள் 5 பேர் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து 50 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், லக்னோவில் 7 கார் திருடர்கள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த 7 பேரையும் கைது செய்து, அவர்கள் வசமிருந்த 62 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.