மத்திய பிரதேச மாநிலத்தில் சுரங்கம் ஒன்றிலிருந்து 50 லட்ச ரூபாய் மதிப்புடைய சுமார் 11 காரட் அளவிலான வைரக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பன்னா மாவட்டம் ராணிபூர் பகுதியில் அனந்திலால் குஷ்வாகா என்பவர் லீசுக்கு எடுத்த நிலத்தில், வைரம் தோண்டும் பணிகளின் போது இந்த வைரக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட வைர அதிகாரிகாரியிடம் அனந்திலால் ஒப்படைத்த நிலையில், அது 10.69 காராட் எடை கொண்ட வைரம் என்பதும், அதன் மதிப்பு 50 லட்ச ரூபாய் இருக்கும் என்பதும் தெரிய வந்தது.
இந்த வைரமானது ஏலம் விடப்பட்டு, அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி உள்ளிட்டவை போக மீதமுள்ள தொகை அனந்திலாலிடம் ஒப்படைக்கப்படும்.
வைரச்சுரங்கங்களுக்கு பெயர் போன பண்டேல்கண்ட் பிராந்தியத்தில் இது போல் ஏராளமான வைரச் சுரங்கங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.