வெளிநாட்டு பயணிகள் கட்டாயம் 7 நாள்கள் தனிமைபடுத்தப்படுவர் என்று டெல்லி விமான நிலைய ஆணையத்தின் புதிய கொரோனா வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் முதல் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், வந்தே பாரத் மிஷன் திட்டத்தின்கீழ் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்கள், சிறப்பு விமானங்கள் மூலம் திருப்பி அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் டெல்லி விமான நிலைய ஆணையம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களில் சர்வதேச விமான பயணிகள், அவர்களுடையே சொந்த செலவில் விமான நிலையம் ஏற்பாடு செய்யுமிடத்தில் கட்டாயம் 7 நாள்கள் தனிமைபடுத்தப்படுவர் என்றும், அதன்பிறகு வீட்டில் ஒருவாரம் தனிமைபடுத்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து டெல்லி வருவோர் இந்த நிபந்தனையை ஏற்பதாக கையொப்பமிட வேண்டும், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட 4 தரப்பினருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.