செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"ஐ.டி., பிபிஓ நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய டிசம்பர் வரை அனுமதி..!

Jul 22, 2020 01:29:54 PM

தகவல்தொழில்நுட்பத்துறை மற்றும் பிபிஓ நிறுவன ஊழியர்கள் டிசம்பர் 31ம் தேதி வரை, வீட்டிலிருந்தபடியே பணிபுரிய மத்திய தொலைதொடர்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். முதலில் ஏப்ரல் மாதம் மட்டும் இதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இம்மாத இறுதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, பணியும் தடையின்றி நடைபெறுவதால் இந்த நடைமுறையைத் தொடர தொழில்நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தன. அதன்படி, மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் அக்டோபர் வரையில் இந்த நடைமுறையை நீட்டித்துள்ள நிலையில், கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் ஆண்டு இறுதி வரையில் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி வழங்கின.

இந்த சூழலில் அனைத்து மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சர்களுடன் மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கொரோனா பரவலின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் பிபிஓ நிறுவன ஊழியர்களை ஆண்டு இறுதி வரை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு விப்ரோ மற்றும் நாஸ்காம் ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

class="twitter-tweet">

Government extends work from home rules for IT, BPO companies till December 31https://t.co/XIFirgjreO pic.twitter.com/3EZiAcRdsW

— Livemint (@livemint) July 22, 2020


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement