வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை கொண்டு சென்று வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இது குறித்து வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், டெல்லியில் இருக்கும் 2016 அரசு ரேஷன் கடைகளில் இருந்து பொருள்களை வாங்குபவர்களுக்கு நேரடி டெலிவரி நடக்கும் என தெரிவித்துள்ளார்.
ஏழை மக்கள் கவுரவுத்துடன் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்பது தமது அரசின் கனவு என குறிப்பிட்டுள்ள அவர், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமும், வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் வழங்கும் திட்டமும் ஒரே நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
ஜாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வருமான சான்றிதழ் போன்றவற்றை நேரடியாக வீட்டுக்கே கொண்டு கொடுக்கும் திட்டத்தை டெல்லி அரசு ஏற்கனவே துவக்கி உள்ளது.