செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

லடாக்கில் தாய்... டெல்லியில் மகன்; விமானத்தில் வந்த தாய்ப்பால் புட்டிகள்... 35 நாள் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!

Jul 21, 2020 02:06:36 PM

டாக் தலைநகர் லேவை சேர்ந்தவர் ஜிக்மெத் வாங்டு. இவரின், மனைவி டோர்ஜே பால்மா நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்நாடகா, மைசூரில் உள்ள பள்ளியில் ஜிக்மெத் வாங்டு ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூன் 16- ந் தேதி டோர்ஜே பால்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்தது முதலே பால் குடிக்க மறுத்தது. தொடர்ந்து, டெல்லியிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையில் குழந்தையை அனுமதிக்க லே மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். டோர்ஜே பால்மாவின் சகோதரர் கடந்த 18- ந் தேதி குழந்தையை டெல்லி மருத்துவமனையில் அனுமதித்தார். அதேவேளையில், குழந்தையின் தந்தை ஜிக்மெத் வாங்டுவும் மைசூரிலிருந்து டெல்லி மருத்துவமனைக்கு சென்றடைந்தார்.

மேக்ஸ் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த போது, உணவுக்குழாயில் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக , 19- ந் தேதியே குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதேவேளையில், 'அறுவை சிகிச்சை செய்திருப்பதால், குழந்தைக்கு தாய்ப்பால் கிடைத்தால் இந்த நேரத்தில் நல்லது. அதனால், தாய்ப்பால் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்...!' என்று ஜிக்மெத் வாங்விடத்தில் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், குழந்தையின் தாய் டோர்ஜே பால்மா லடாக்கில் லேவில் இருந்தார். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் ஜிக்மெத் வாங்டு யோசித்தார். அப்போது, லே விமான நிலையத்தில் பணி புரிந்த தன் நண்பர்கள் சிலர் குறித்து அவருக்கு நினைவுக்கு வந்தது.

உடனடியாக, அவர்களை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். நண்பர்கள் உதவியதால், லேவிலிருந்து தினமும் டெல்லி விமான நிலையத்துக்கு தாய்ப்பால் கொண்டு செல்ல விமான நிறுவனங்கள் முன் வந்தன. குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு இலவசமாகவே விமான நிறுவனங்கள் இந்த சேவையை செய்தன. கடந்த 35 நாள்களாக தினமும் , 1000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து மனைவி கொடுத்து விடும் தாய்ப்பால் புட்டிகளை டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு சென்று ஜிக்மெத் வாங்டு வாங்கிக் கொள்வார். பிறகு, மருத்துவமனையில் செவிலியர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவார்கள். காலியான பாட்டில்களை மீண்டும் லேவுக்கு விமானம் வழியாக கொடுத்து விடுவார் ஜிக்மெத். தாய்ப்பால் குடித்ததால், தற்போது, குழந்தையின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இன்னும் இரு நாள்களில் குழந்தை வீடு திரும்பவுள்ளது.

இது குறித்து மேக்ஸ் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் ஹர்ஸ்வர்த்தன் கூறுகையில், ''இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகள் குழந்தை பிறந்த 48 மணி நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். அதனால்தான், மிக விரைவாக அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்தோம். இப்போது, குழந்தை நன்றாக குணமடைந்து விட்டான். செவிலியர்களைப் பார்த்து சிரிக்கிறான். கைகால்களை அசைத்து விளையாடுகிறான் '' என்றார்.

குழந்தையின் தந்தை ஜிக்மெத் வாங்டு, ''என் நண்பர்களால்தான் என் குழந்தைக்கு தினமும் தாய்ப்பால் கிடைத்தது. இப்போது, குழந்தை குணமாகியிருக்கிறான். அதற்காக, டாக்டர்களுக்கும் , நண்பர்களுக்கும் விமான நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.

 


Advertisement
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement